அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

ஒவ்வாமை இயலாமை
ஒருவருக்குக்கொருவர் ஆகாமை

நம்பாமை நயக்காமை
நடுநிலைமை இல்லாமை

இல்லாமை ஈயாமை
இதயமில்லாமை இங்கிதமறியாமை
கல்லாமை காசில்லாமை
கம்பீரம் காதலில்லாமை

குஞ்சு குருமனையும்
கூசாது கூடல்
பஞ்சனையில் வீழ்த்திப்
பத்தினியை மேய்தல்
நஞ்சணைய நாகரிக
நங்கையர் கொல்லும்
அஞ்சனவிழி சுழற்றிக்
கேளிக்கை செய்தல்

சூதுவாது வம்பளப்பு
வரும்படிக் குளறுபடி
சாதிநீதிச் சண்டை
சங்கார வெம்மை
பாதிவழிப் பிரிவு
பலபாதக விரிவு
நாதியற்ற நிகழ்வென
நம்மிடத்தில் பலகறைகள்
ஊதித்தள்ள முடியாது
உறைந்து போயுள்ளன.

கறையகற்ற உகந்தது சலவை
கசக்கின் போகும் அனைவரினதும் கவலை

தேவை அதற்கு விழிப்புணர்வு

ஆதலால் வாரீர்
அடைவை நோக்கி

நெஞ்சகச் சந்தில் குந்தி
வஞ்சகம் விதைக்கும் எண்ணங்கள்
பஞ்செனப் பறக்கச்
செய்வோம் சலவை.

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading