தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

மார்கழியே மறக்குமா மனது..

வசந்தா ஜெகதீசன்
திங்களின் இறுதி திருப்பத்தின் உறுதி
வந்திடும் மாற்றம் ஆண்டெனப் பூக்கும்
பாலன் யேசுவின் பிரசவம் நிகழும்
பாரெங்கும் ஒளிக்குமிழ் வெளிச்த்தைப் பரவும்
ஒய்வில் மனங்கள் ஒத்தடம் தேடும்
நினைவில் ஏனோ நீங்காத கலக்கம்
அன்றைய பொழுதின் அவலத்தின் தேக்கம்
சுனாமி தந்த சுவட்டின் நெருக்கம்
சுக்கு நூறாகும் இதயத்தின் குறுக்கம்
இடரின் பிடியில் இன்னமும் வாழ்வு
இன்றும் இயற்கையின் தாக்கத்தில் உலகு
அன்னை மண் அவலத்தின் கோரமாய் பதிவுஎண்ணிட விம்முது இதயமே
நொருங்குது.
தொன்மையும் இன்றும் தொடரும்வலி
தொடர்கின்ற வாழ்விற்கு ஏது வழி!நன்றி

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading