அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

” மாவீரர் ஈகம் “

ரஜனி அன்ரன்

“ மாவீரர் ஈகம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 21.11.2024

மாவீரர் ஈகம் மகத்தான தியாகம்
சாவுக்கு நாள் குறித்து
சரித்திரம் படைத்த பயணம்
தாய்த்தேசம் தனைமீட்க
தேசீயத்தின் கனவை நனவாக்க
தேகத்தையே ஈகம் செய்த
தேசமைந்தரின் தியாகமெல்லாம்
பேச வைக்குதே கார்கால கார்த்திகையில் !

உன்னத இலட்சியத்திற்காக
இலட்சியத்தின் வெற்றிக்காக
இறுதி மூச்சு வரை போராடி
உறுதியோடு மண்ணை முத்தமிட்ட
உன்னத மறவர்களின் ஈகம்
ஈடிணையில்லா வரலாற்றுக் காவியம் !

தாய்த்தேசத்தின் தாகம் தீர்க்க
தம்முயிரைப் பணயம் வைத்து
நீதியின் பாதையில் நடந்து
நெஞ்சினில் தீயினை ஏந்தி
புறநானூற்று வீரம் காத்து ஈகம் செய்த
புதுநானூறு படைத்த மறவருக்காய்
தீப ஒளியேற்றி விழிகளை ஒளிர வைப்போம் !

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading