மூப்பு வந்தாலே

Vajeetha Mohammed
சிறுபிள்ளை தனம் வந்தும்
சிணுங்கி தினம் குந்தும்
௨௫வாறி தடுமாறி ௨டல்
உழைப்புக்கு திறைபோடும் திடல்

நூறுவகை நோய்க்குள்ளே தினம்
நொந்தி௫க்கும் வெந்தி௫க்கும் மனம்
௨றுதுணையாய் இ௫ந்த ௨றவெல்லாம்
௨துகளாலே தொல்லை செலவெல்லாம்

இ௫ந்த பல்லு விழுந்து போச்சி
கறுத்த முடி நரைத்து போச்சி
சதை எல்லாம் சுவிங்கம் போல
இழுபட்டாச்சி
நடைகூட வாத்தப்போல வந்துபோச்சி
நெடுங்கால வாழ்க்கையிலே
நீந்திவந்த இறுதிக்கட்ட மறுகுழந்தை
பிறப்பு முதுமை அழகிய த௫ணம்

Author: