மூலதனம்..

வசந்தா ஜெகதீசன்

தேசங்கள் முழுதும் தேடப்படும்
தேவைகள் உணர்ந்து ஆளப்படும்
வாழ்வுக்கும் இதுவே அத்திவாரம்
வருமானத்திற்கும் வாழ்வு தரும்
உறவுக்குள் உரிமைக் குரல் எழுப்பும்
நல் நட்புக்கும் நம்பிக்கை
உரமாகும்
அறிவுக்கு கல்வியாய் அடிபதிக்கும்
அன்புக்கும் இதுவே அடிப்பலம்
கவிதைக்கும் கருவே மூலதனம்

அளப்பெரும் சேவையின் ஆதாரம்
காத்திடம் அறிந்து கருக்கொண்டு
காரியம் ஆற்றிடும் மூலதனம்
பணம் என்ற ஓன்று மட்டுமல்ல
பற்பல வளங்களும் மூலதனம்
உடலுக்கு உயிரே மூலதனம்
அன்பும் அறனும்
வேரென ஆளுமை நிறைக்குமே மூலதனம்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading