விடுப்பு..!!

விடுப்பு விடுமுறை பயணம் நன்றாய் அமைய வேலைப் பழுவும் கொஞ்சம் அதிகரிக்க ஆலயங்கள்திருவிழா அயலில் கொண்டாட அலுப்பு இன்றியே நானும் நகர்ந்திட உடலும் கொஞ்சம் உற்சாக பெற்றிட தண்ணீர்...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மெல்லென மழைத்துளி

மெல்லென மழைத்துளி

மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட

சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்

எள்ளென்றால் எண்ணை ஆகாது தம்பி

ஏற்றத்தை உயர்வாக்கி ஏமாறாது நடப்பாய்

தெள்ளத்தெளிவு உன்னிடம் வேண்டும் பாராய்

கள்ளம் வேண்டாம் கடமை வேண்டும்

உரிமை என்று உழறித் திரியாது

உருக்குலைந்து அலைமேவும் குமிழியும் ஆகாதே

பிறருக்காக வாழ்வது வாழ்வென அலையாதே

பிரயோசனம் இன்றிப் பொழுதைக் கழிக்காதே

மெல்லென மழைத்துளி மண்ணை நனைப்பதற்கல்ல

இயற்கை என்பதை அழியாமல் காப்பதே

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading