” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-10-2025

பேச்சை இழந்த பின்
பேசாத அத்தியாயம்
அலையற்ற கடலாய்
அமைதியின் நிலையாய்

மௌனத்தின் மொழியாய்
மனங்களின் உரையாடலாய்
சொல்லமுடியாமல் வார்த்தைகளை
சுமந்து துடிக்கும் சகபணித் தோழியே!

வேற்று மொழி பேசினாலும்
வேடம் அற்ற நேசிப்பினால்
பல கதைகள் பேசினோம்
பாசத்தை பரிமாறினோம்.

பணிஓய்வு காலம் உனை அணுக
பக்கவாதம் அணிந்ததுவே
மிக்க துயர் நெஞ்சடைக்க
மௌனமொழியை வரைகிறேன்.

உன் ஓசைகள் இழந்தாலும்
எண்ணங்கள் புரிகிறது
ஆசைகள் நிறைவேற
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading