ரஜனி அன்ரன்

வளர்ந்த குழந்தைகள் தாமே…….கவி….ரஜனி அன்ரன் (B.A) 27.04.2023

மாற்றுக் குழந்தைகள் அல்ல
வேற்று வாசிகளும் அல்ல இவர்கள்
மாற்று வழியினில் மகத்துவமான கண்மணிகள்
ஆற்றலும் ஆளுமையும் அதீத திறனும் கொண்ட
போற்றுதலுக்குரிய பொன்மணிகள்
ஆற்றுப்படுத்தி அரவணைத்தாலும்
மனதளவில் என்றும் அவர்கள் குழந்தைகளே !

துடிப்பும் துடியாட்டமும்
திறனும் தீரமும் மிக்க திறமைசாலிகள்
தீவிரமாய் செயற்படும் செல்வங்கள்
பேறு பெற்ற கண்மணிகளை
வளர்ந்த குழந்தைகளை
பொறுமை கொண்டு கையாண்டால்
பெருமை மிக்கவர் ஆக்கிடலாம் !

பாமுக ஆசானும் பற்றோடு
அழகிய மலர்களை அரவணைத்து
அவர்களின் திறமைக்கு களமும் அமைத்து
உணர்வினை மதித்து உற்சாகமும் கொடுத்து
உலகமே வியக்க திறமைகளை அரங்கேற்றி
உன்னத சேவையினை ஆற்றி வருகின்றாரே
உரமோடு கை இணைப்போம் நாமும்
வளர்ந்த குழந்தைகளுக்காய் !

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading