தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ரஜனி அன்ரன்

“ செங்காந்தள் மலர்கள் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 30.11.2023

கார்கால கார்த்திகையில்
கனமழை பொழிகையில்
மண்ணினுள் வேரோடி
வேலிகளில் படர்ந்து கொடியாகி
காவல் தெய்வங்களை ஆராதிக்க
ஆண்டிற்கு ஒருமுறையாக
அழகாகப் பூத்துக் குலுங்குமே
செங்காந்தள் மலர்கள் !

செங்குருதி நிறத்தோடு
பொன்மஞ்சள் வண்ணம் தாங்கி
அகல்விளக்காய் ஒளிர்ந்து
கார்த்திகை மைந்தர்களை
கைகூப்பி தொழுகிறதே
செங்காந்தள் மலர்கள் !

பழந்தமிழர் இலக்கியங்களில்
பண்பாட்டு விழுமியங்களில்
புறநானூற்று வீரத்தில் கலந்து
தேசத்தின் தேசீயப் பூவாக
தேச மைந்தர்களின் ஆராதனைப் பூவாக
பூத்துக் குலுங்குமே செங்காந்தள் மலர்கள் !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading