விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜிதா அரிச்சந்திரன்
வரப்புயர..
வரப்பு யரவே நீருயரும்
வயலில் பயிர்கள் செழித்தோங்கும்
அரம்போல் இலைகள் நெடிதுயரும்
அழகாய் கதிரும் தள்ளிவிடும்
வரத்தைப் போல வளர்த்தெடுத்தே
வயது வந்த தும்நாமும்
அரிவாள் கொண்டு அறுத்தெடுத்தே
அழகாய் மலைபோல் அடுக்கிவைத்தே
சூடு மிதித்து நெல்மணிகள்
சுருக்கும் எடுத்து மூடைகட்டி
ஏடு மீதில் எண்ணிக்கை
எழுதி வைத்து களஞ்சியத்தில்
போடும் வழக்கம் தமிழரது
போன தெம்வழக் கம்தொலைந்தே
வாடும் நிலையும் வந்தெம்மை
ஆட்டிப் படைத்த தித்தீவில்
பிடித்து வாட்டும் வேளைவந்தே
பித்துப் பிடித்த அரசாளும்
படித்து புதிய கொள்கையை
பரப்பி விட்ட தனால்தானே
தடித்த வீதி வானுயர்ந்த
தங்க கட்ட டங்களுமே
துடிப்பு டனேதான் எழுந்தனவே
துளிர்த்த மரங்கள் அழிந்தனவே
மரங்கள் இன்றி இயற்கையுமே
மழையைத் தரவும் மறுத்ததுவே
கரத்தை நீட்டி மன்றாடி
கடவு ளிடத்தில் வேண்டினாலும்
மரத்துப் போன மூடரான
மாந்தர் எழவே வழியில்லை
உரத்துக் கூறி இறையும்தான்
உழுது தள்ளிப் போனதெம்மை
கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்.
இலங்கை.
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments