ரஞ்சன் கலைச்செல்வன்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
பொற்பழ்மொழியின்
பொருளினை உணர்த்தும்
கொற்றன் குடும்ப
குறையை எதிர்க்கும்
நற்சமர் கண்டோம்
நம்தாய் நாட்டில்.
ஆட்சிக்கு வந்து
ஆண்டு இரண்டு
வீட்சியை கண்டு
விட்டது ஆட்சி
குடும்பம் கூடி
கிவித்தது கோடி
இடும்பை சூழ்ந்தது
எம் திரு நாட்டை
கொடியவர் ஆட்சி
குலைத்து மீட்சி
பெறுவது உறுதி

Nada Mohan
Author: Nada Mohan