அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.02.2024
கவி இலக்கம் -301
கைக்குள் கையாய்

மெய்க்குள் தோய்ந்த பொய்
உணர்வுகள் ஊடுருவி ஒரு
கைக்குள் கையாய் பையில்
அடங்கா கைத் தொலைபேசி

முடங்கும் நேரந் தெரியாது
தொடங்கும் பொய்கள்
தொய்வின்றி அல்லும் பகலும்
உரையாடும் தொல்லைபேசி

யார் யாரோ முகந்தெரியா
உறவுகள் போர்வையாக்கி
உரையாடல் ஊடலாகிப்
பெரும் பாடாய்ப் போர்
தொடுத்தது

முக்கிய தேவை மறந்து
மூக்கை நுழைத்த பதிவு
கோர்வையாக்கிப் பாதை
தெரியாது போகுமிடம் புரியா
தேவையற்றவை இழுத்துத்
தலையிடி ஆனது .

Nada Mohan
Author: Nada Mohan