முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.03.24
ஆக்கம் -306
சிறகுகள்

இறகு உதிர உதிரச்
சிறகு முதிர்ந்தாலும்
காற்றின் தாலாட்டுக்
கீதமுடன் வானத்தில்
பறந்து களைத்தது
தாய்க்குருவி

உச்சிக் கிளையில் புல்லின்
பஞ்சு மெத்தையில் பசியோடு
காத்திருக்கும் குஞ்சுக் குருவியை
எண்ணிப் பார்த்தது பரிதாபமாய்

பாரினில் உல்லாசமாகச் சுற்றிடும்
தன் கால்களில் ஏனிந்த நடுக்கம்
வயது போய்விட்டது என்பதாலா ?
எங்கும் தீனி கிடைக்காததால்
சோகமுடனே திரும்பியது

இரைக்காகக் காத்திருந்து வெளியே
வந்த சின்னக் குஞ்சுகளைக் கொத்திக்
கொத்தி கீழே தள்ளி விட்ட போது
“இனிமேல் உன் சொந்தக் காலில் நில் ”
என்றதும் கீழே விழுந்து சிறகொடிந்து
உயிரை மாய்த்துக் கொண்டது .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading