ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.04.24
ஆக்கம் -142
பொறுமை

பெண்ணிற்குத் தாய்மை பெருமை
ஆணிற்குத் தூரிகை சேய்மை
மண்ணிற்குச் சரிகை பொறுமை

கண்ணிற்குக் கோபமூட்டும் கருமை
விண்ணிற்குத் தாபமூட்டும் ஆளுமை
எண்ணிற்குச் சாபமூட்டும் ஏழ்மை
இவ் வண்ணமோடு சுற்றிடும்
பூமித் தாயின் பொறுமை

தன்னில் சோகம் சூழ்ந்திடினும்
கண்ணை இமை காப்பது போல
காலமெலாம் கோலம் மாறாது
நலமோடு காத்திடும் தாயின்
பலமே பொறுமை .

Nada Mohan
Author: Nada Mohan