தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.03.2023
ஆக்கம்-96
நீர்க்குமிழி

விண்ணிலிருந்து மண்ணிற்கு
மழைத்துளி எனும் பெயரோடு
வீரீயத்துடன் விரைந்து வந்ததே
நீர்க்குமிழி

கண்ணில் பட்டதும் இருந்த இடம்
தெரியாது கரைந்து போனதே

பள்ளிச் சிறுவர் ஊதிய சவர்க்கார
நுரையில் பெருத்த நீர்க்குமிழி
பொத்தென வெடித்துக் காற்றோடு
கலந்து பறந்து போனதே

நினைவுகள் சுமந்த கனவோடு
காலை மாலை அலுப்பின்றி
வேலை செய்த விவசாயியில்
பூத்த வியர்வை எனும் நீர்க்குமிழி
ஒரு நொடிப் பொழுதில் மறைந்து
போனதே

நிரந்தரமற்ற நீண்ட வாழ்வும் கூட
பரந்த உலகில் பிறந்த மனிதனில்
நீர்க்குமிழி போல மண்ணில்
மறைந்து புதைந்து போகுமே.

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading