மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ராணி சம்பந்தர்

22.10.24
ஆக்கம் 163
ஆசான்

மனம் துள்ளி ஆடுது
கனம் பண்ண பள்ளி நாடுது
தினந்தினம் எண்ணிப்
புள்ளிக் கோலம் போடுது

அள்ளித் தந்த ஆதரவு, அரவணைப்பு
சொல்லிச் சொல்லிக்
கரங் கூம்புது
நுள்ளிய காதில் புகுந்த
அறிவு இன்றும் உதவிய
ஆசான் பாதந் தொட்டு
வணங்க அருகில் இல்லை என மனம்
ததும்பி வாடுது

அன்பு,கனிவு, இரக்கம்,
பொறுமை,கடமை ,
கண்ணியம், கட்டுப்பாடு தட்டுப்பாடு
இன்றி தாய், தந்தை
போல் நல்வழி தந்தது
நன்றி கூறிட கண்ணீர்
வெதும்பி ஓடுது

கவலை ஏதுமே தெரியாது பசி யாதுமே
புரியாது எமை அறிவுச்
சிலையாக வடித்திட
உலகம் போற்றும்
அற்புத சிற்பிகள்
என்றென்றும் வணங்கும் ஆசான்களே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading