ராணி சம்பந்தர்

29.10.24
ஆக்கம் 164
சலவை

அடிமேல் அடி விழுந்து
வாடி வதங்கித் துவண்ட
கோடி உழைப்பாளியில்
வியர்வை ஆனதே

பிடிக்கும் பிடியில்
துடிக்கும் துணியில்
குடிக்கும் சாறு பிழிய
வடிக்கும் கண்ணீர்
கோர்வை ஆனதே

கோடி மாந்தர் உடு புடவை, வேட்டி சால்வை
துவைத்து கொடி கட்டித்
தொங்க வைத்துத் தேடிடும் தோழமையின்
காணிக்கை போனதே

நாடி நின்று தேடிக் கொன்றது மூளைச்
சலவை செய்த தோயல்
இயந்திரம் இரண்டு கைகள் ஆனதே

உழைப்பாளியில் ஊனமாய் வயிற்றில்
அடித்து மௌனமாய்
வேட்டு வைத்ததே என
சலவைத் தொழிலாளி
வெந்து புலம்பியது
நொந்து வேடிக்கை
ஆனதே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading