மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ராணி சம்பந்தர்

12.11.24
ஆக்கம் 166
சூர வதை

அசுரனுக்குப் போதை
இறுமாப்பு
சூரனுக்குப் பாதை துரும்பு
நரகாசுரனுக்கு நரம்பு
வதைவதைப்பு

சூர அரக்கன் இந்திர
ஞாலத் தேர் சுற்றிச்
சிதைத்த கழிப்பு
அகோர அரக்கர்
ராஜபக்ஷர் தந்திரக்
குண்டு விமான இன
வெறி தொற்றி எறிகணை அழிப்பு

சூர வதை கதிர்காம
முனைத்திருப்பு
கோர மமதை வல்லரசுக் கூட்டு
முனைத்திரிப்பு

நன்னீர்க் கடலில்
அங்கு ஆழ்த்திய
சேனைப்படைப்பு
நந்திக் கடலில் இங்கு
அமிழ்த்திய துப்பாக்கி
முனைப்பு

கண்ணீரில் தத்தளித்து
மிதந்த தமிழனில் பதை
பதைத்துப் புதைந்த சூர
வதை தாய் மண்ணின்
நெஞ்சில் சுட்ட ஆறாக்
காயங்களே .

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading