மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ராணி சம்பந்தர்

04.06.24
ஆக்கம் 149
பெண்ணே

பள்ளிக் கலை விழாவில் பெண்ணே
நீ துள்ளி ஆடிய நடனம்
கண் முன்னே
வெள்ளித் தட்டில் பூக்கள் தூவி அலை அலையான பள்ளி
மாணவர் கை தட்டிய
ஆரவாரம் என் காதில்
இன்னும் ஒலிக்குதே

புள்ளி போட்ட ரவிக்கை
செவ்வர்ணச் சேலை
கட்டி வண்ணச் சோலை
இல் சக தோழியருடன்
சுற்றிய உன் சிங்காரப்
பார்வை எனைக் கண்டு
சேதி என்னவோ சொல்லியதே

பெண்ணே பொன்னு
மணியே கன்னக் குழி
அழகும், மென் புன்னகை பூத்த முத்துப்
பல் முக அழகும் சிட்டாய்ப் பறக்க மனம்
பேதலிக்குதே

கண்ணே உன் கழுத்தில்
மாலையிட்டு மணக் கோலம் காணத் துடிக்கும் என் உயிரில்
கலந்திட உளம் திறந்து
மனம் நிறைவான பதில்
தருவாயா பெண்ணே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading