வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
பகலவன்…
உலகப் பரிதியின் உறவாளன்
உயிர்ப்பின் தகமை உணர்வாளன்
இருளை நீங்கும் ஒளியாளன்
இல்லையேல் உலகே உறைந்துவிடும்

வளத்தின் வரமாய் வலம்புரியாய்
நிலத்தின் செழிப்பில் நிறைமதியாய்
மனித வாழ்வின் உயர்நிதியாய்
உலகே வணங்கும் பகலோனே

இயற்கைக் காப்பின் இதயம் நீ
நன்றி போற்றும் வெய்யோனே
காலச்சக்கர கதிரோனே
நானில வளத்து ஞாயிறே
பாரையே இயக்கும் பகலோனே
உதயத்து சூரியன் உதிக்கா விடில்
உலகே இருளின் உறைவீடு.

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading