வசந்தா ஜெகதீசன்

சாலவும் சிறப்பே சாதனை விருதே...

சாலவும் சிறப்பே சாதனை விருதே…
ஊடகத் துறைக்குள் உயரிய பயணம்
உருவாக்கத் திறனில் உயர்ந்திட்ட மகுடம்
அடுத்த தலைமுறை நோக்கிய பயணம்
ஆண்டுகள் முப்பது இதற்கென உபயம்

பற்பல ஊடகம் சார்ந்தே உதயம்
பணிகளில் இடர்கள் துண்டிக்கும் தருணம்
அரைமணிப்பொழுதில் ஆக்கங்கள் பலதாய்
வீணற்ற உருவாக்கம் வெற்றியின் நிகழ்வாய்
வீழ்தலும் எழுதலும் வழியெனத் தொடரும்
தனித்துவக் காற்றலை தனக்கென மிளிரும்

பற்பல நிகழ்வுகள் ஒருங்கென இணையும்
இளையோர் திறமையின் இலக்கே இமயம்

ஐரோப்பா எங்குமே அரங்கத்தின் நிகழ்வு
அடுத்த தலைமுறைக் கலைஞர்க்கு களமிடும் அரங்கு
சினிமாவைத் தவிர்த்திடும் ஊடகமன்று

அர்ப்பணச் சேவையில் அதீத பற்று
அழகிய மலர்களின் திறமைக்கு முதன்மையின் சொத்து

எத்தனை வலிக்குள்ளும் வழிகளைச் சுட்டி
பெரியோர் சிறியோர் ஊடக உளவியல் கற்று
இன்றும் பணிகளை ஆற்றும் வித்தக விதைப்பு
ஆண்டுகள், மாதங்கள் பெயரிடல்
பெற்று
இன்னுமொருமுறை திட்டத்தில் உதவிடல் அறமாய்
உலகத் தமிழ்மொழி நாள் இருபதாண்டு உயர்வில் ஒன்றி
பயணிக்கும் பாமுகத் தொலைக்காட்சி விஞ்சி
தொடருமா ஊடகப்பணி இதுபோல் மிஞ்சி
சாலவும் சிறந்திட்ட சரித்திரப் பணிகள் நூறாய்
காவியமைந்தர்கள் கருப்பொருளாகும் கார்த்திகை திங்களின் மாண்பு
சாதனை விருது பெற்றுயர் அதிபரின் சமூகத்தின் பணிக்கு ஈடு இணையேது சான்று
வாழ்த்துக்கள் பல்கோடி உரித்தாகும் வேளை
வரிக்குள்ளே வித்திட்ட சேவைகள் சொற்பம்
வெற்றியின் விருதுகள் இன்னுமாய் இடம்பெறல் திண்ணம்!
இலண்டன் தமிழ் வானொலி வளர்முகமே பாமுகச் சின்னம்
வாழ்த்துக்கள் வளர்க!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading