சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மாதவமே உந்தனை..

மாதவமே உந்தனை …
கற்கால கரிகாலர்
காவலரண் காப்பாளர்
ஈழம் மீட்பீற்காய் இன்னுயிரை ஈர்ந்தவர்கள்
ஞாலக்குன்றின் நம்பிக்கை போரொளிகள்
விடுதலை யாகமே வேள்வியாய்
வீரத்தின் வேட்கையில் வெற்றியாய்
நேருக்கு நேராய் நின்றெதிர் போரில்
ஈழத்தின் மீட்பே இலக்கின் அம்பு
காலத்தை வெல்வதே கடமையின் சிறப்பு
மாதவ மைந்தர்கள் மாதவம் புரிந்தே
மனிதத்தின் நேயத்தை மாண்புடன் போற்றினர்
ரணமாய் கொதிக்கும் மனதின் வலுவும்
கணமாய் தாங்கும் போரின் வலியும்
புடமிடு ஈழத்தின் புன்னகை வாழ்வும்
உறவுகள் காப்பதே உயரிய மேன்மையாய்
காடும் மலையும் கடந்த போரும்
சாவும் வாழ்வும் சந்திக்கும் நிகராய்
துணிந்தனர் வீரர் தம்முயிர் ஈர்ந்தனர்
தகர்ந்து மடிந்தனர்
மண்ணினை மீட்டி மரணத்தை வென்றனர்
ஈகையின் கொடைகள் ஈழத்தின் வேர்கள்
மாதவப் புதல்வரே மண்ணின் மைந்தரே
காலத்தை வெல்லும் கல்லறை கனவுகள்
ஞாலத்தில் மெய்ப்படும் நம்பிக்கை விளக்குகள்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan