வசந்தா ஜெகதீசன்

தொழிலாளி…
மூலத்தின் ஆதாரம்
முழு உலகின் மூலதனம்
காலத்தின் தோழமையில்
கருங்கல்லைச் செதுக்கலிட்டு
கரங்களை உளியாக்கும்
காலத்தின் முகவரிகள்
மூளையின் வித்தகத்தை
முழு உழைப்பின் விதைப்பினை
முதுகெலும்பாய் சுமப்பவர்கள்
ஞாலத்தின் உயிர்நாடி
நம்வாழ்வின் சுகவாதி.
எண்ணற்றோர் உழைப்பே
ஏற்றி வைக்கும் பிரகாசம்.
நன்றி
மிக்க நன்றி ப. வை. அண்ணா
தொடரான வீச்சே தூரிகைகள் துலங்கும்.
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading