முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

எழுத்தறிவு இல்லையெனில்…
கல்வியெனும் விளக்கொளிக்கு
திரியாகி ஒளிர்வது
கருத்துக்களை பரிமாறும் மொழியாகி மிளிர்வது
எழுத்தென்னும் ஊற்றே
எதற்கும் முதன்மை உரித்தே

உரிமைக்கு உறுதியாய்
கையெழுத்து சாட்சியாய்
கல்விக்கு ஏடாகி
கருத்துரைக்கும் சாட்சியது
எழுத்தறிவே பல்திறனாய்
எமக்குதவும் அரிச்சுவடி

இல்லையெனில். மொழியேது
இடர்கூறும் வழியேது
இனமென்னும் கூறுகளும்
ஈடி இணையில்லாத பாசத்தின்
பரிவுகளும்
பரிமாற்றமில்லாமல் மெளனத்தை மகுடமிட்டு
நலிந்தே நசுங்கிடுமே

மொழிக்கே மூலதனம்
முன்னுரைப்பின் அவதானம்
எழுத்தறிவே வரம்பாகும்
எல்லைகளைத் தாண்டும்
எங்கும் எம்மை இனம் காட்டும்
எதிலுமே ஏற்றத்தை வழிகாட்டும்
ஆசானின் அரவணைப்பு
பெற்றோரின் பேரிணைப்பு
கற்றோராய் கடலறிவு பெற்றோராய்
உலகறிவில் உயர்வாக்கும்
உயிர்ப்பின் உன்னதர்கள்
உருவாக்கும் ஆசான்கள்!

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading