இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கலவரம்…
உருவமே அற்றது
உருக்குலைவினை தருவது
எதிரும் புதிருமாய்
எங்குமே நிகழ்வது
உயிர்கள் படுகொலை
உடமைகள் அழிநிலை
சூழலைப் பாதிக்கும்
சுதந்திரம் இழப்பிக்கும்
கலவரக் கோலங்கள் கண்டிடும் பலதையும்
அழிவின் அவலமே அடித்தளமாகும்
அனர்த்த வதைகளில் அழிந்ததே எம்மினம்
ஆண்ட இனமது அடிமையாய் ஆனதே
நீண்ட காலத்தின்
நிர்க்கதி வாழ்வு
கலவரம் தந்த கணதியின் சுவடு
எங்கு நிகழினும்
ஏற்காதே மனசு
வேண்டாம் கலவரம்-இது வேதனைச் சாளரம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading