வலியதோ முதுமை

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-23

28-03-2024

வலியதோ முதுமை

வலிமை கொண்டவர்க்கு
முதுமையொரு பொக்கிஷ்ம்
வாழ்ந்து சாதித்த இளமையின்
மொத்த அனுபவம்!

சுருக்கங்களிங்கே உலகிற்காய்
உதவிய கரங்கள்
நோக்கங்கள் எதுவுமற்ற
சிறப்பு நியங்கள்!

இறப்பென்பது தலைவிதி
புரிந்த பக்குவம்
இதில் நரையென்பது
முதுமையின் அழகு

ஊருக்கும், உறவிற்கும்
உதவிய பின்
தனக்கென
தானமும் சேர்த்தவர்.

நொந்த நிலையிலும்
நோகாமல் வாழ
வந்து உதவுவோர்க்கு வாரி
வளங்கும் வள்ளலானார்.

வலியதோ முதுமை
வந்தாலும்
மெலியவே போகக்
காண்பீர் இவர் பலம்.

தான, தருமத்தோடு
தனக்கென தக்காத்துவர
பரம்பரையும் உனைக்காத்து வரும்
புகட்டிச் சென்ற பண்பாளன்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading