“வலி கொண்ட தேசம்

நேவிஸ் பிலிப் கவி இல(534)

சிறு மழைத்துளியும்
அசைந்தாடும் தென்றலும்
சங்கமித்து சங்கீதம் பாடும்
சிங்காரச் சோலை

வனப்பான தேசம் இன்று
வளமிளந்து போனதே
வசந்த நிலமெல்லாம்
வெள்ளக் காடாயானதே

கொட்டும் மழையும் சூறாவளியும்
சுழன்றடிக்க ஆறுகள் குளங்கள்
மதகுடைத்து கரை புரண்டோட
வைகுண்ட பயணங்கள்
வழிஎங்கும் தொடர

தலைமுறை காணா
கொலைக்களமென
மணல் மேடின் சரிவில்
உடலங்கள் புதையுது

இது இயற்கை சூழலின் மாற்றமா?
மனிதனின் சுய நல ஏற்றமா ?
இருந்தும் மனித நேயம் மடியவில்லை
உதவிக்கரம்நீட்டும் மனிதத்தில்
காண்கின்றோம். மனித மாண்பை நன்றி……..

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading