முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

விடைபெறுகிறாயே கோடையே

சிவதர்சனி

வியாழன் கவி-2025

விடைபெறுகிறாயோ
கோடையே…!!!

விருப்பின்றி அனுப்புகிறோம்-நீ
விருப்போடு செல்லுகிறாய்
தடுப்பாரின்றி அழுகிறோம்
நீ தடை என்றே செல்லுகிறாய்..

சுட்டுவிடும் சூரிய ஒளியும்
இனி இல்லை இங்கே
சுகமாய்த் தாலாட்டும் இதமான
தென்றலும் இனி இங்கே இல்லை..

வண்ண வண்ணப் பூக்களும்
கண்ணில் தென்படா
வாசம் தந்து எனை ஈர்க்கும்
எண்ணமும் உன்னிடம் இல்லை..

கோடி சுகம் தந்த கோடை
நீ விடை பெற்றுச் செல்ல
நான் கண்ணீரோடு மெல்ல
விடையனுப்பி வைக்கிறேன்..
சிவதர்சனி இராகவன்
12/9/2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading