மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஷர்ளா தரன்

விருப்பத்தில் ஒரு தலைப்பு
விரும்பி எழுத ஒரு வாய்ப்பு
கரும்பாய் கவிதை ஒன்று வடிக்க
காலத்தை கணக்கிட்டு காத்திருந்தேன்

வேலைப்பழு வேகம் கொடுத்ததால்
காலக்கணக்கு தப்பாயிற்று
கவிதைக்கான நேரமோ
கரையை தொட்டுவிட்டது
கனிந்திருக்க வேண்டிய கரும்பு
வெதும்பி நிற்குது் என்
விருப்பு கவியாய்…..
விரும்பி் எழுத முடியாமல்

திரிந்து திரிந்து களைத்த
என் கால்கள்
ஓய்ந்து ஒரு சில மணிநேரம் இருக்க
பாய்ந்து ஓடி வந்து
பாமுகம் பார்க்கும் நேரமிது
பல வகை கவி கேட்கும் தருணமிது

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading