மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

ரஜனி அன்ரன்

பூக்குமா அமைதி ? கவி……ரஜனி அன்ரன் (B.A) 17.03.2022

வல்லரசு நாடொன்று
வல்லாதிக்க வெறி கொண்டு
எல்லைகளைப் பிடித்து
வெல்ல வேண்டுமென்ற அவாவில்
அல்லும் பகலுமாய் அயல்நாட்டின் மீது
அகோரத் தாக்குதல்களை
வான் தரை கடலென்று நடாத்தி
குண்டுமழையைப் பொழிகிறது கோரமாக !

உச்சக் கட்டத்தில் வெடிக்குது உக்கிரப்போர்
இறந்தவர் பாதியாய் இருப்பவர் மீதியாய்
உயிரைக் கையில் பிடித்தபடி
அண்டை நாடுகளுக்கு தஞ்சம்தேடி
இடம்பெயர்கிறார்கள் மக்கள் இலட்சக்கணக்கில்
பூக்குமா அமைதி புலருமா விடியல் ?
போர்நிறுத்தம் தான் வந்திடுமா ?

ஐரோப்பிய நாடுகளும் அவலத்தில்
உலகே தவிக்குது பொருளாதாரத்தில் சிக்கி
எரிவாயு எரிபொருட்கள் எண்ணை விலையேற்றம்
அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு
அநியாயமாக இறக்கிறார்கள் மக்களும்
பூக்குமா அமைதி புலருமா விடியல் ?

Nada Mohan
Author: Nada Mohan