சிவா சிவதர்சன்

வாரம் 171.
“எதிர்ப்பு அலை ”

நானிலத்தில் நல்லதையே நாடி நிற்பார் நமனுக்கும் அஞ்சார்
நாடி நிற்கும் கொள்கைகளில் அணுவும் பிசகார்
இவர் காட்டும் எதிர்ப்பலைகள் என்றும்சோடை போனதில்லை
அந்நியர் தம் அடிமை விலங்கொடிக்க மகாத்மா காந்தி காட்டிய எதிர்ப்பலை
உண்மையும் நேர்மையும் அகிம்சையும் என்றும் வெல்லும் எனக்காட்டும் சத்திய சோதனை
நாலு பத்துக்கோடி மக்கள் அன்று காட்டிய ஒற்றுமை
இன்று நூறு பத்துக்கோடி மக்கள் சேர்ந்து பாடும் பாரத மாதாவின் பெரு வெற்றியை
உலகெங்கும் இன்று நோக்கின் ஆர்ப்பாட்டங்கள்
பொதுநோக்குப் போர்வையில் சுயலாபங்கருதும் போராட்டங்கள்
இலட்சியத்தின் வேட்கை உறுதியான கொள்கை என்றும்
வெற்றியின் கதவைத்தொட்ட சம்பவங்கள்
சரித்திரத்தின் பொற்பதிவாய் என்றும் வாழும் நிச்சயங்கள்
நேர்மை, கொள்கை, அடிபணியாமை இவை மூன்றும்
எதிர்ப்பலைகளின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகள்

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading