சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1624!

உழைப்பின் உன்னதம்!

உழைத்துப் பிழைக்கும் உன்னத மானிடம்
உலகை ஆளும் உயரிய பீடம்
தழைக்கும் பயிரினம் பசுமை தேடும்
தன் நலம் நாடாது பிறருக்கு உதவிடும்!!

வியர்வை சிந்தும் நொடிகள் யாவும்
வீணாய்ப் போவது கிடையாதே
விழிப்பாய் நடக்கும் காலம் இங்கே
விதையாய் முளைக்கும் தருவாய் மாறும்!!

வல்லமை கொண்டு வறுமை விலக்க
வலிகள் தாங்கி உடலைத் தேற்ற
மானிடம் கண்ட மாண்பாம் உழைப்பு
மறந்து வாழ்தல் கீழ்மை காணும்!!

பணமும் பொருளும் ஆட்டிப் படைக்க
அதனின் வழியில் மனதும் ஈர்க்க
புதிய உலகை ஆக்கும் சக்தி
புதையல் போலும் உழைப்பால்
முடியும்!!
சிவதர்சனி இராகவன்
5/5/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading