மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 177
07/06/2022 செவ்வாய்
பழமை
———-
நேற்றைய தினத்துப் புதியது
நெஞ்சு கொஞ்சம் மறந்துபோய்
நினைவி லிருந்து விலகி விடின்
நாளைய தினம் அது பழையதா?

கொடியில் நேற்று உருவாகி
கொல்லையில் இன்று பூவாகி
கடிதினில் அரும் காயாகி
கனியாகின் அது பழையதா?

ஏணிக்கு ஒரு கால் போனால்
எடுத்து வீசுவது வழமைதான்!
தூணின் மேற்பகுதி தூர்ந்தாலும்
தூரா திருப்பது அடித்தளமே!

குளிர் காலம் ஒன்று வந்ததுமே
களை யிழந்து போன தெல்லாமே
துளிர் விட்டு மீள உயிர்ப்பதற்கு
தூணாய் இருப்பது பழம் வேரே!

புதிய தென்று நாம் கருதுபவை
புதிதாய் இன்று முளைத் தவையா?
பழைய ஊறலில் இருந்துதானே
பக்குவம் மேலும் பிறக்கிறது!

வயது முதிர்ந்ததால், உடல்
வலிமை சற்று இறங் கியதால்
கயவர்போல நினைத்து அவரை
காலில் போட்டு கசக்கலாமா?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading