அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 177

தலைப்பு — பழமை

உலகெங்கும் உள்ளனர் உறவினர் என்றெண்ணி
நலமான பலமான நமக்குரிய நல்லவற்றை
விலக்கிவிட்டு விலகவிட்டு வாழ நினைக்காது
வளமாக வாழ்விக்கும் பழமையைப் பேணுவீர் !

பொன்னகையும் போலிப் பொருட்களும் பொருளல்ல
அன்பும் புன்னகையும் அளவிடமுடியா சொத்துக்கள்
என்றும் இவற்றை வோண்டுவோற்கு வழங்கி
மண்ணில் பழமையை மேன்மையை வளர்த்திடுவீர்!

பாட்டி சொன்ன பழங்கதைப் பயன்கள்
வீட்டில் கூட்டாக வாழ்ந்த நாட்கள்
நாட்டில் அமைதி நமக்களித்த நன்மைகள்
காட்டின பழமையின் கனிவைச் சுவையை.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
07/06/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading