சிவரஞ்சனி கலைச்செல்வன்

பாட்டன் பூட்டன் காலத்தில்
பழமை என்று நாம் சொன்ன
காதுக்கடுக்கன் குடுமி எல்லாம்
காணாமல் போளது ஒரு காலம்
நாட்டம் கொண்டு இளையவர்கள்
நாக ரீகம் இது என்று
கடுக்கன் பூட்டி காதுகளில்
கருமை கூந்தல் முடி முடிந்து
திரியும் காலம் மீண்டதனை
திரும்பி பார்க்க தெளிவாகும்.
உருளும் உலகில் பழமை என
உள்ள ஒன்று காலத்தால்
அழிந்தது என்று எது உண்டு
அனைத்தும் மீளும் காலம் உண்டு.
புட்மக விமானம் புராணத்தில்
புதுவகை ஹெலி பிளேன் இன்றைக்கு
அற்புத பாணம் வில் அம்பு
ஆனது ஷெல்லாய் இன்றைக்கு.
சித்தர் முனிவர் மெய்ஞானி
திரிபில் இன்றவர் விஞ்ஞானி
இன்றது புதுமையும் உரு மாறும்
இன்னொரு புதுமையில் இது மறையும்

Nada Mohan
Author: Nada Mohan