க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 179
அவள் ஏன் அழுதாள்

புகையிரதப் பயணத்திலே
ஒரு நாள்
இரு சிறு பிள்ளைகள்
துனைவியுடன்
இருக்கையிலே

எதிர் இருக்கையில்
அமர்ந்திருந்த
பத்து வயது சிறுமி
அடிக்கடி பார்வையை
நம் மேல் பதித்தாள்

பத்து நிமிடத்தில்
அவள் கண்களில்
கண்ணீர்

இவள் அழுகைக்கு
நாம் காரணமானோமா?
பிரிந்த பெற்றோரை
நினைத்தாளா ?

இன்னகள் நிறைந்த
அவள் வாழ்வின்
சோதனைகளை நினைத்தாளா?

கல்வியில் பிரச்சனையா?
கடந்த வாழ்க்கையில்
ஏதோ குழப்பமா?

மௌனப்பார்வையின்
நகரவுகளான
விடை தெரியாத
வினாகளில் இதுவும்
ஒன்றாக இன்று வரை!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading