அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்திம் சந்திப்பு வாரம்- 16.08.2022
184

தலைப்பு !
“தேடுகின்றோம் கண்பார்வை முன்னே”

எங்கே தொலைத்தோம் எம்உறவுகளை -என்றே
எண்ணி எண்ணி ஏங்கிதவிக்கும் நெஞ்சங்களே

வினாகொண்டு அழைக்கின்றோம்
விடைகள்மட்டும் கிடைக்கவில்லை
விலைபோயினரா எம்உறவுகள்
விலைமதிப்பற்ற நம்நாட்டிற்க்காக /

இரண்டாயிரம் நாட்கள் ஆகியும்
இதுவரையிலும் விடிவேதுமில்லை
இரவுபகலாய் எண்ணங்களை
இதயத்தில்சுமந்தபடி தேடுகின்றோம் /

உலகநாடுகளின் ஓரத்தில்
உலாவி வாழ்கின்றனரா
உயிரயே அர்ப்பணித்து
உறங்கினரா மீளாஉறக்கத்தில் /

தேடும் எம்உறவுகளை
தேடிதேடி அழைகின்றோம்
தேற்றிடவோ உறவும்இன்றி
தேய்பிறையாய் கரைகின்றோம் /
நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading