பத்மலோஜினி திருசெந்தூர்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 194

தலைப்பு — ஆட்டத்தை அடக்கிட வீரம்

எம்மோடுள்ள ஐவர் எமக்கே எதிரிகள்
வம்பை வளர்ப்பர் வில்லங்கம் விளைத்திடுவர்
அம்பாய் எழுந்து இவர்களை அடக்கிட
எம்மிடம் வீரம் இருந்திட வேண்டும்.

ஐம்புலன் ஆட்டத்தை அடக்கிச் செயற்பட்டு
ஐம்புலன்களை ஒடுக்கி அறவழி நடப்பின்
எம்மிடம் அமைதியாய் ஏற்றம் இணைந்திடும்
நிம்மதி ஒளிவீசி நன்மை அளித்திடும்.

உளவுறுதி பெற்றோர் மனவுறுதி கொண்டு
புலனைந்தையும் மடக்கின் புதுமை பெறலாம்
வளமாய் அமைதியை விழுப்பத்தைச் சேர்க்கலாம்
நலமே வாழலாம் நல்லவை நாடிவரும்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
04/10/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading