மாற்றத்தின் ஒளியாய்

இரா.விஜயகௌரி மாற்றத்தின் ஒளியாய் மனங்களுள் தெளிவாய் ஏற்றத்தின் படியாய் துலங்கிடும் எழிலே காலத்தின் மாற்றம் கனிந்திடும் பொழுதில் தொடுத்திடும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

நகுலா சிவநாதன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் ஒளியாய் மண்ணின் விடியல் மலர்கின்ற இன்நாள் வாழ்வின் பொன்னாள் மாண்புறும் மக்களின்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கனவு நிஜப்படுமோ

எல்லைமீறி மனதில் புதைத்த ஆசைகள்
தொல்லைதந்தே உள்ளத்து உள்ளிருந்து ஓசைகள்
சொல்லிமுடியாது தினமும் காணும் கனவுகள்
அள்ளியதை எடுத்து அசைபோடுமே நினைவுகள்

கனாக் காணவென வந்துகொண்ட பருவம்
வினாக்கு விடைதேடி அலைந்துவிடும் உருவம்
பினாத்திக்கொண்டு பித்துப் பிடித்தநிலை புரிந்திருந்தும்
அனாதையாக்கிவிடும் கூடாவிட்டால் சொந்தங்கள்  அருகிருந்தும்

பலித்திடாதோ விழிமூடிக் காணுகின்ற சொப்பனங்கள்
வழிந்துவிட தினத்திற்குள் உவகையின் கணங்கள்
களிகூரக் கண்டவைகள் நிகழ்ந்திடவே நேரில்
வழிவிட்டு நிகழ்த்திடாதோ விதியதுவும்  பாரில்

ஜெயம்
22/11/2022

Nada Mohan
Author: Nada Mohan