கமலா ஜெயபாலன்

மொழி
கம்பனும் பாரதியும் கண்ண தாசனும்
கண்ட தமிழ் மொழியாம்
எம்மவர் போற்றும் ஏற்றமிகு எளிலான
எங்கள் தாய் மொழியாம்
குமரியில் தோன்றி குன்றினில் பாய்ந்து
கடாரம் வெண்ற மொழியாம்
கமகம எனவே காற்றுடன் கலந்து
கவிமழை கொட்டும் மொழியாம்

வல்லினம் மெல்லனம் வந்து இடையினம்
வல்லமை கொண்ட மொழியாம்
சொல்லில் சுடர்விடும் சுகங்கள் பலதரும்
சுந்தரத் தழிழ் மொழியாம்
மரபாய்த் தோன்றி மதியினால் வலம்வரும்
மங்காத தேன் மொழியாம்
வரமாய் வந்த வன்மொழி தனையே
வணங்கியே போற்றிப் புகழ்த்திடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading