அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்.

07.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-213.
தலைப்பு !
“நாதம் “
வைகறை விடியலை வரவேற்கும் கூடி
வந்தனம் தந்திடும் பட்சிகளின் நாதம்//

தூரத்து முழக்கமுடன் இருள்சூடி வானம்
தூதுவிடும் மழையென மேகத்து நாதம்//

தீபஒளி திருநாளில் திருக்கோயில் பெருநாளில்
திருவிழா தேர்வீதி திசைஅதிரும் நாதம்//

சரிகம பதநிச சந்தமும் சிந்த
சங்கதி சொல்லும் சங்கீத நாதம்//

அபிசேக தரிசனம் அவசகுணம் செவிநாடா
அதிர்ந்திடும் திசைகளில் ஆலய நாதம்//
நனிமிகுந்த நன்றிகள்.
பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading