உயிரான உறவு..

வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் காலமெலாம் தாங்கி...

Continue reading

உயிரான உறவே…

வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே... வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் காட்டி நேசமுடன்...

Continue reading

உயிரான உறவு…..

இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள்...

Continue reading

-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

ச.ச.சந்திப்பு 222 “பெற்றோரே”
பெற்றவர்கள் முகம் நிதமும்வரும்
பற்றோடு அவர் வளர்த்த பாசம் நினைவில்வரும்
ஆண்டுத் திவசத்தை
அய்யரை அழைத்து
ஆண்டாண்டு நடாத்தினேன்
அவர்கள் தந்த சீதன வீட்டில்
ஆண்டு பல முன் போராலே
அகன்றோம் அதை விட்டு
போரின் செல் அடியில்
பேரிடியில் சிக்கிய பெருவீடு
பாழடைந்து மேடாய் ஊரில்
பார்க்க சகிக்கவில்லை
ஜயாவும் அம்மாவும்
ஆசையுடன் கட்டிய வீடு
ஒய்யார புகையிலை செடி
ஒவ்வொரு ஆண்டும் பயிர் செய்து
சேமித்த காசில் கட்டிய வீடு
ஜயாவின் படம் ஒன்றும் இல்லை
ஆனலும் முகம் மனதில் அகலாமல்
கையால் தலை கோதி
கன்னத்தில் தரும் முத்தம்
எண்ண இன்றும் கவலை
அம்மா போய் ஆண்டு பதினெட்டு
அவர் அடியில் சென்று சேர
ஆசை .
எப்போ வரும் அழைப்போ?
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan