நகுலா சிவநாதன்

பொசுங்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்

பொலிவாய் புதுமை தந்த நூலகம்
பொழுதிலும் நிறைத்த அறிவுப் பெட்டகம்
வலிந்து தீயோர் அழித்த கூடம்
வளர்ந்து வருகிறதே அறிவின் தென்றலாய்

ஆசியா கண்ட அருமபெரும்; நூலகம்
தேசிய பரப்பினை நிறைத்திட்ட நாலகம்
பல்லாயிரம் தமிழரை உயர்த்தய ஏணி
பாருக்கே பெருமை தந்த தோணி

தாயக மக்களின் கனவுச் சுரங்கம்
தாராள அறிவினை ஊட்டிய மையம்
பொசுக்கிய தீயில் மடிந்து மாண்டாலும்
நசுக்கிய உள்ளங்கள் நலிந்தே சென்றதே!

சாம்பலின் மேட்டில் சரித்திரம் படைத்தே
தாங்கி நிமிர்ந்து நிற்கிறது பெருமையுடன்
எம்மை வளர்த்த எழில் நூலகமே
உம்மின் பெருமையை உலகில் கண்டோமே

நீண்ட வாழ்வில் நிமிர்ந்து நின்று
தீண்டும் கல்வி விருட்சம் காண
மீண்டும் ஒரு பொசுக்கும் தீ வேண்டாம்
நீண்டு புதுப்பொலிவு கொண்டே எழுக!

நகுலா சிவநாதன்1723

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading