அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்.

30.05.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-225
தலைப்பு !

மூண்ட தீ”

மூண்டதீ பிளம்பில்
மாண்ட உயிர்களே !
ஆண்டுகள் கடந்தும்
அணையா ரணங்களே !

வேண்டும் தாய்நாடென
வெந்தழிந்த உடல்களே!
நீண்டநாள் போராடியும்
நிலைபெறாத அலைகளே !

ஆண்டவன் பூமியென
ஆழத்துடித்த மறவர்களே !
சீண்டி அழைத்தே
சினம்கொள்ள செய்தார்களே !

தீண்டியே உயிர்களை
தீக்இரை கொடுத்தார்களே !
மாண்டும் மண்ணில்
மறைத்திடத் துடித்தார்களே !

ஊண்உயிர் இழந்தும்
உறவையே பிரித்தார்களே !
வேண்டுமென்றே அனைத்தையும்
வேரோடு பிடுங்கினார்களே !

வேண்டாமென்ற வேதனையைமட்டும்
விடைபெறாது வைத்தார்களே !
தாண்டிஎல்லை சென்றாலும்
தசையாடி துடித்தீர்களே !

நன்றி வணக்கம் 🙏🏻

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading