ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.06.23
கவி இலக்கம் -106
மணி

அருமையான தலைப்பு
கருவோடு சேருமிடமோ
மாணிக்கம்

மனுநீதிச் சோழனில் ஆராய்ச்சி மணி
சேதி சொல்வதில் கோயில் மணி

ஒளி விளக்கில் தூண்டா மணி
வழியில் துரத்த சைக்கிள் மணி

ஒரு குண்டு மணிகூட இல்லை
எனப் பிதற்றியதே
அதிமதுர வெள்ளைக் குண்டு மணி
ஆனதே

சிவப்பு விதையின் குன்றி மணி 2
ஒரு மஞ்சாடி ஆகி எடையில் பேர்
போனதே

சிரிப்பொலிக்கு கவுண்டா மணிக்
கவுண்டரே
குண்டானதில் போண்டா மணி
குண்டு மணி ஆனாரே

பணத்திலும் பேரெடுத்த
மணியே மணியாயனதே

அனைத்திலும் சிறந்த மணியே
அன்பு,பண்பு,பாசம், குணம்
நிறைந்து மணி மகுடத்தில் எமை
ஏந்திய மணியம் எனும் பெயரோடு
ஊர்,பேர் போற்றும் எம் தந்தை
மாணிக்கமே .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading