ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.06.23
கவி இலக்கம்-275
மரண வலி

மண்ணுலகில் வந்தவர்க்கெல்லாம்
கண் இமைக்கும் நேரம்
விநாடிக்கு விநாடி துரத்திடுமே

பணக்காரன் ஏழை எனப் பாராது
காத்திருந்து கொத்திடுமே

ஒவ்வொரு செயலுக்கும்
ஒவ்வொரு பெயர் உள்ளது போல்
இதற்குப் பெயர்தான் விதியோ

இவ் விதி எனும் சதியானது
எவ் வீதியிலும் வந்திடுமே

மண்ணிலும் நடக்கலாம்
விண்ணிலும் விபத்தாகலாம்

பிறக்கும் போது பிரசவ வலியானது
இறக்கும் போது துறக்க முடியாத
மன வலியானது இறைவனுக்குச்
சொத்தான மரணமே
மனிதனுக்குப் பெரிய
தலையிடி ஆனது.

Nada Mohan
Author: Nada Mohan