Selvi Nithianandan

திருநங்கை
பிறப்புறுப்பால் ஆணாய்
பின்ணுணர்வில் பெண்ணாய்
பாலின மாற்ற படைப்பால்
படைத்த குற்ற அடையாளம்

அலி, பேடி, அரவாணி
பட்டப் பெயர்களும் சூடி
அகிலத்தில் ஒதுக்கும்
மானிட சமூகம் இன்றும்

இணைந்த உருவம் ஒன்றாகி
இறையின் மறுருவம் என்றாகி
ஆசீர்வாதம் அதிஷ்டம் இன்றாகி
அங்கிகரித்தே திருநங்கை நாளுமாய்

Nada Mohan
Author: Nada Mohan