வசந்தா ஜெகதீசன்

வரப்புயர….
வற்றாச் சுரங்கமாய்
நீர்நிலை ஊற்று
வரண்டிடும் வேளையும்
காப்பது போற்று
திரண்டிடும் வேளையும்
தேவையே காப்பு
வரம்பது மீளாது வளர்வது தோப்பு
வாட்டமே அற்று வளர்கின்ற நாற்றில்
வயிற்றுப் பசிக்கு உணவென விருந்து
உழைப்பின் விகுதியே உயர்த்தும் உராய்வில்
வரப்பென உயரும் வாழ்வின்
தகுதி
உணவாய் உழைப்பாய்
உலகிடை விருத்தி
வரப்பென வரம்பிடும் அறிதிறன் புரட்சி
அகிலத் தோப்பினை ஆளுமே ஆட்சி
ஆற்றல் வரப்பினை போற்றுதல்
உயர்ச்சி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading