மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-228
விருப்புத் தலைப்பு !

“கரும்புலி “
தாயக நாட்டிற்கும்
தன்இன பிறப்பிற்கும்
தானமாய் உயிர்ஈந்த
தன்னலமற்ற உடன்பிறப்பே !

தீயகொடுமை தனை
தீயிட்டுக் கொழுத்திட
தீரா வேட்கை கொண்ட
தியாகச் செம்மலே !
காயம் கை காலன்று
கருகிய உடலாகக்
கருமருந்துக் குழிக்குள்ளே
கரைந்த உயிர்களே !

தூய மனத்தினில்
துளிர்விட்ட நாட்டுப்பற்றில்
துணிந்து போர்க்களம் ஏகிப்
பொருதித்
துடித்து மரணமே !

கானகத் தோட்டத்தில்
கரும்புலிக் கூட்டங்கள்
காணும் இடமெங்கும்
கன்னிமானாய் ஓடிடும் !

ஊனதை உண்டிட
ஒடியே ஒருகூட்டம்
ஊடுருவி வந்தங்கே
உயிர் குடித்துச் செல்லுமே !

வீணது உடலங்கு
விடுதலைப் புலியாகி
வாழ்வது நிலையாது
வாடிப் பொசுங்கியதே !

மானமுள்ள மறத்தமிழன்
மண்ணிற்காய் உயிரீந்து
மக்களுக்காய் உடலீந்து
மரணித்துப் போனானே !

கரும்புலி கால்சுவடு
காணாமல் போனாலும்
கனவோடு விதைத்தது
கருவாகி முளைக்குமே !

இரும்பு நம்பிக்கை
இதயத்தில் மலருதே
இனிக்குது கரும்பாக
இக்கணத்தினுள் தமிழாகி

உருண்டு உடலில்லை
உயிருண்டு உறுப்பில்லை
உணர்வுகள் துடிக்குதே
உயிர்தந்த நாட்டுக்காய்

இருந்தாலும் ஆயிரம்பொன்
இறந்தாலும் ஆயிரம்பெண்
இதயத்தில் கரும்புலிகள்
இறுதிவரை வாழ்ந்திடுமே !

அபிராமி கவிதாசன்
11.07.2023

Nada Mohan
Author: Nada Mohan