Selvi Nithianandan

என்று தீரும் (582)
ஆண்டுகள் பலவாய்
ஆட்சியின் பிடியிலே
வேண்டுகோள் விடுத்தும்
வீழ்ச்சியின் வலியிலே

தேடும் உறவுகள்
தேடியே இன்னுமே
வாடும் அகங்கள்
வாஞ்சையின் விழியிலே

காலங்கள் நகருதே
காத்திருப்பு முடியலே
முடிவுகள் தெரியா
முகவரி சரிதமே

பசிப்பிணி தீர்த்திட
பணபலம் இல்லை
முகத்திரை விலத்தி
முடிவை கொடுத்திடுஅரசே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading